சிறப்பு வாய்ந்த புத்தகங்களை அதுவும் லட்சக்கணக்கில் ஒரே இடத்தில் பார்த்தால் எவ்வளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்

சென்னையில் நீண்ட வரலாற்றை பதிவு செய்து கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியின் மற்றொரு நிகழ்வு இன்று அரங்கேற காத்துக் கொண்டிருக்கிறது. இது 43வது புத்தகக் கண்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்கம், பதிப்பாளர் சங்கத்தினர் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு புத்தக கண்காட்சியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

மொத்தம் 800 அரங்குகளில் ஒரு கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன. இம்முறை 20 லட்சத்திற்கும் அதிகமான வாசகர்கள் வருகை புரிவர் என்று பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் தெரிவித்துள்ளார்.