அமேசான் காட்டுக்கு தீ வைக்கச் சொன்னது டைட்டானிக் ஹீரோதான்: பிரேசில் அதிபர் குற்றச்சாட்டு

லியாண்டோ டிகாப்ரியோ, அமேசான் காட்டுத்தீயை அணைக்க 5 மில்லியன் டாலர் நிதியையும் அறிவித்தார்.


பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் மழைக்காடுகள் பூமியின் நுரையீரல் எனக் அழைக்கப்படுகின்றன. கடந்த ஆகஸ்டு மாதம் அந்தக் காட்டில் ஏற்பட்ட மாபெரும் காட்டுத்தீ உலக அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விவாதத்தைக் கிளப்பியது.

டைட்டானிக் திரைப்படத்தில் நடித்த உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான லியாண்டோ டிகாப்ரியோ, அமேசான் காட்டுத்தீ குறித்து கவலை தெரிவித்திருந்தார். காட்டுத்தீயை அணைக்க 5 மில்லியன் டாலர் நிதியையும் அறிவித்தார். இந்திய பதிப்பில் இது 36 ஆயிரம் கோடி!

இந்நிலையில் அண்மையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ, “ஹாலிவுட் நடிகர் லியாண்டோ டிகாப்ரியோதான் அமேசான் மழைக்காடுகளுக்கு தீ வைக்குமாறு பணம் கொடுத்தவர்” என்று குற்றம் சாட்டினார்.