பிலிப்பைன்ஸில் உள்ள சிடியோ பரிஹான் என்ற கிராமம் கடல் நீர்மட்டம் அதிகரிப்பதால் ஆண்டுதோறும் 4 செ.மீ. கடலில் மூழ்கி கொண்டிருக்கிறது.
நாட்டின் தலைநகர் மணிலாவிலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் சிடியோ பரிஹான். பல ஆண்டுகளுக்கு முன் தீவாக இருந்த இந்த கிராமம் கடல் நீர்மட்டம் அதிகரித்துக்கொண்டே வந்ததால், இப்போது, மிதப்பதுபோல் காட்சியளிக்கிறது.
புவி வெப்பநிலை அதிகரிப்பின் விளைவாக இந்த கிராமம் உள்ள பகுதியில் கடல் நீர்மட்டம் மெல்ல மெல்ல கூடிக்கொண்டே வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 4 சென்டிமீட்டர் அளவுக்கு கடல்மட்டம் அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கிராமத்தில் உள்ள வீடுகளில் சூரிய மின்சக்தியே பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள ஒரே ஒரு கிணறுதான் குடிநீருக்கான ஆதாரமாக இருக்கிறது. கடந்த 2011ஆம் ஆண்டு இந்த கிராமத்தைச் சூறையாடிய புயல் இங்கிருந்த தேவாலயம் மற்றும் நீதிமன்றத்தை தகர்ந்துவிட்டது.